Advertisment

'ஊர் கட்டுப்பாடு, பீப் பிரியாணி விற்க கூடாது': வைரல் வீடியோவுக்கு பா.ஜ.க நிர்வாகி விளக்கம்

கோவையில், ஊர்க்கட்டுப்பாடு காரணமாக பீஃப் பிரியாணி விற்பனை செய்யக் கூடாது எனக் கூறியதாக, வைரலான மிரட்டல் வீடியோவிற்கு பா.ஜ.க நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Cbe beef issue

கோவை மாவட்டத்தில், பீஃப் பிரியாணி விற்பனை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு பா.ஜ.க நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

கோவை, உடையம்பாளையம் பகுதியில் ரவி - ஆபிதா தம்பதியினர் தள்ளுவண்டியில் பீஃப் பிரியாணி விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களது கடைக்கு வந்த பா.ஜ.க நிர்வாகியான சுப்பிரமணி என்பவர், மாட்டிறைச்சி விற்க கூடாது எனக் கூறி மிரட்டல் விடுத்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலானதால் காவல்துறையினர் தற்பொழுது தங்களிடம் பேசியதாக இத்தம்பதியினர் கூறியுள்ளனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment
Advertisement

அதே நேரத்தில் ஊர்க்கட்டுப்பாடு காரணமாக பீஃப் கடை போடக் கூடாது எனக் கூறியதாக மிரட்டல் விடுத்த பா.ஜ.க ஓ.பி.சி அணியின் மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

 

Coimbatore Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment