கோவை சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதிகளில் நடமாடி வரும் காட்டு மாடை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
சரவணம்பட்டி கீரணத்தம் பகுதிகளில் காட்டு மாடு ஒன்று நடமாடுவதாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்த 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் காட்டுமாடை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை கீரணத்தம் பகுதியில் நடமாடி வரும் காட்டு மாடு.. பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி pic.twitter.com/VFSQ7rfB9Y
சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் தென்பட்ட காட்டு மாடு, இரவு வனப்பகுதிக்குள் புகுந்ததால் தென்படவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி பகுதியில் காட்டு மாடு தென்பட்டது. பின்னர் வனத்துறையின் பார்வையில் இருந்து மீண்டும் மறைந்தது.
இந்த நிலையில் மறைந்த காட்டுமாடை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மாட்டை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட தீவிர முயற்சி ஈடுபட்டு வந்த நிலையில், பெட்ரோல் பங்கு, குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் காட்டு மாடு உலா வருவதும், பொதுமக்கள் பயந்து ஓடுவதும் போன்ற வீடியோக்களும் வெளியாகியது.
இதனிடையெ வனத்துறையினர் காட்டுமாட்டை தீவரமாக கண்காணித்து வந்த நிலையில் மையிலம்பட்டி பகுதியில் இருந்த காட்டுமாடை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து லாரியில் ஏற்றி ஆனைகட்டி வனப்பகுதிக்குள் கொண்டு விட கோவை வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“