பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு எருமை, யானை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள அட்டகட்டி மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாகவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை ஒன்று அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அப்பகுதி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் சென்று தங்களது பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த ஒற்றை காட்டு யானை அடிக்கடி குடியிருப்புக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் பலமுறை வனத்துறையினரிடம் கூறியும் வனத்துறை எந்த நடவடிக்கை எடுக்காமல் இந்த யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளாமலும் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஒற்றைக் காட்டு யானையால் உயிர் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்கு முன்பே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இந்த ஒற்றை காட்டு யானையை இப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் மின்வாரிய குடியிருப்புகளை சுற்றி வன எல்லையில் அகழிகள் ஏற்படுத்தி யானை மற்றும் மற்ற வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#VIDEO || பொள்ளாச்சி: மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை... பீதியில் பொதுமக்கள்!https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | #Pollachi | @rahman14331 pic.twitter.com/wALcfoEtGo
— Indian Express Tamil (@IeTamil) July 27, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.