ரேஷன் கடையை தும்சம் செய்த காட்டு யானை… அரிசி - பருப்பை ருசி பார்த்து விட்டு ஓட்டம் - வீடியோ!

கோவை சுல்தானியபுரம் ரேஷன் கடையை காட்டு யானை தும்சம் செய்த பின் அரிசி - பருப்பை ருசி பார்த்து ஓட்டம் பிடித்தது.

கோவை சுல்தானியபுரம் ரேஷன் கடையை காட்டு யானை தும்சம் செய்த பின் அரிசி - பருப்பை ருசி பார்த்து ஓட்டம் பிடித்தது.

author-image
WebDesk
New Update
Coimbatore: wild elephant dashed ration shop Sulthaniya puram video Tamil News

கோவையில் காட்டு யானைகள் செய்து வரும் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

கோவை நவாவூர் - சோமையம்பாளையம் செல்லும் வழியில் சுல்தானியபுரம் ரேஷன் கடை உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இந்த கடைக்கு நேற்று அதிகாலை 5 யானைகள் வந்தன. கடையில் இருந்த அரிசியால் ஈர்க்கப்பட்ட அந்த யானைகள் கடையின் ஷட்டரை பலமாக தாக்கி உடைத்தன.

Advertisment

இதில் ஷட்டர் உடைந்தது. பின்னர் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த 10 மூட்டை அரிசியை சிதறடித்து தின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே கடையில் யானைகள் புகுந்து அரிசியை ருசித்து சென்றிருந்தது. ருசி கண்ட பூனை போல் மீண்டும் யானைகள் அதே கடைக்கு வந்து அரிசியை தின்றுள்ளது.

கடந்து 10 நாட்களாக ஐ.ஓ.பி காலனி மருதமலை அடிவாரம் கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதியில் யானைக்கூட்டம் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகிறது. இதில் ஒற்றை யானை மட்டும் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து உள்ளது.

நேற்று அதிகாலை அந்த யானை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை உடைத்து அங்கே ஸ்டோர் ரூமில் இருந்த உளுந்தம் பருப்பை ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து நடையை கட்டியது. யானை கூட்டத்தை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். யானைகள் செய்து வரும் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Video Elephant Viral Social Media Viral Coimbatore Viral Video Tamil Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: