/indian-express-tamil/media/media_files/tLcso7z1g3Ieo3UUmW8i.jpg)
கடந்த சில நாட்களாக மருதமலைக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவு தேடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Viral Video | Coimbatore | Elephant: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வன கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலவி வருகின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வலம் வரும் காட்டு யானைகள் வேளாண் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விட்டுச் செல்வதை யானைகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளைநிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த தோட்டப்பணியாளர்களின் குடியிருப்பை முகாமிட்டன. அப்போது ஒரு காட்டு யானை ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடி அங்கிருந்த காய்கறிகளை எடுத்து சாப்பிட்டது.
யானையைப் பார்த்ததும் வீட்டிலிருந்த தோட்ட பணியாளர்கள் அச்சத்தில் உறைந்தனர். அப்போது தோட்ட பணியாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்றொருவர் வீட்டில் ஒன்னும் இல்ல அவ்வளவுதான்.போ சாமி என யானையிடம் கூறி திருப்பி அனுப்ப முயன்றார். இந்த செல்போன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
'ஒன்னும் இல்ல போ சாமி'... உணவு தேடி வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானையின் வைரல் வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #Elephants | #Viralvideo | 📹 @rahman14331pic.twitter.com/nGSK47VrnU
— Indian Express Tamil (@IeTamil) June 8, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.