பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
Coimbatore News in Tamil: கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி தாளியூரில் இன்று அதிகாலை 6 மணியளவில் குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியடைந்து சத்தமிட பலரும் அங்கு திரண்டு யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். இப்பகுதியில் சமீப காலங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகும் வண்ணம் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு நபரை காட்டு யானை கொன்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளதால் வனத்துறையினர் தினமும் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கும் பட்சத்தில் விரைந்து வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.
இதனால் ஊருக்குள் புகும் காட்டுயானைகள் பல்வேறு சேதங்களை விளைவிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ள பொதுமக்கள் வனத்துறையினர் யானைகளை விரட்ட விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று அதிகாலை ஊருக்குள் வந்த யானை கூட்டத்தை அப்பகுதி பொதுமக்கள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து பகிர்ந்து உள்ளனர் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேசமயம் பொதுமக்கள் சிலர் காட்டு யானைகளை போ ராஜா போ என அன்பாக கூறி டாட்டா காண்பித்து வனபகுதிக்குள் விரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
— Indian Express Tamil (@IeTamil) January 24, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil