பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் காட்டு யானைகள் அவ்வப்போது உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதை காண முடிகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அவ்வப்போது பயன்படுகின்றன. மாங்கரை ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் 4 யானைகள் சுற்றித்திரிந்தன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிரஸ் என்கிளேவ் நேற்று இரவு ஒரு மணி அளவில் 4 காட்டு யானைகள் உலா வந்தன. கூட்டமாக வந்த யானைகளைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த யானைகள் யாரையும் தாக்காத நிலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சிறிது நேரத்தில் சென்று விட்டன.
#watchvideo || கோவை: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்… பொதுமக்கள் பீதி!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #elephants | @rahman14331 pic.twitter.com/97PTwgndIx
— Indian Express Tamil (@IeTamil) March 4, 2023
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil