பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளத்தில் மாநகராட்சி உடன் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து பொதுமக்களுக்கான இரண்டு நாள் ஆல் இன் ஆல் அங்காடி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மின்சார உபகரணங்கள், சமையல் பொருட்கள், உணவு பொருட்கள், தின்பண்டங்கள் ஆகிய அனைத்து விதமான பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. இத்துடன் பொழுது போக்கு நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் விடுமுறையில் பொழுது போக்குக்காக காலை 10மணி முதல் இரவு 9மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் நேற்றைய தினம் கலந்து கொண்ட கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் பணிக் குழுத்
தலைவா் சாந்தி முருகன், வரி குழு தலைவர் முபசீரா, கவுன்சிலர்கள் வித்தியா ராமன், உமா விஜயகுமார் ஆகியோர் பொருட்காட்சியில் அமைக்கப்பட்ட இன்னிசை கச்சேரி மேடையில் ஏறி மைக் பிடித்து தேவர் மகன் படத்தில் உள்ள
“இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா .”எனும் பாடலை பாடி அசத்தினர். தற்போது இவர்கள் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH || வீடியோ: இன்னிசை கச்சேரியில் பாட்டு பாடி அசத்திய கோவை பெண் கவுன்சிலர்கள்!https://t.co/gkgoZMIuaK | 📹 @rahman14331 | #coimbator pic.twitter.com/9qm7wvnPeg
— Indian Express Tamil (@IeTamil) September 12, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil