கோவை சங்கனூர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு வீட்டிற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டார் துரிதமாக செயல்பட்டு ஒரு பக்கெட்டை கொண்டு பாம்பை அடைத்தனர்.
பின்னர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற ஜீவ சாந்தி அறக்கட்டளையை சேர்ந்த பெண் பாம்பு பிடி வீராங்கனையான உமா பாம்பிடம் பேசிக்கொண்டே லாவகமாக பாம்பை பிடித்தார். பின்னர் அதனை எடுத்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அந்த குட்டி நாக பாம்பை வனப்பகுதிக்குற்குள் விட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil