Viral Video: கழுத்தில் டயருடன் 2 வருடங்கள் சுற்றிய மான்; விடுதலை கொடுத்த உள்ளூர்வாசிகள்
இதனை நீக்குவதில் எங்களுக்கு அதிகம் சிரமங்கள் இருந்தது. 600 பௌண்டுகள் எடை கொண்ட அந்த எல்க்கின் கழுத்தில் இருந்து டையரை அறுத்து எடுப்பதில் நிறைய சிக்கல்கள் நிலவின.
Colorado bull elk : எல்க் வகை மான்கள் கொலராடோ தேசிய பூங்காவில் அதிக அளவில் காணப்படுகிறது. அங்கே ஒரு மான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கழுத்தில் டையருடன் சுற்றி வந்தது. அதிக எடை கொண்ட அந்த டையரை கழுத்தில் இருந்து கழற்றுவதில் பெரிய சிக்கல் நிலவியது. அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் தேசிய பூங்கா அதிகாரிகள் ஒரு வழியாக அந்த எல்க்கிற்கு மயக்க ஊசி செலுத்தி அந்த டையரை நீக்கும் பணியை வெற்றி கரமாக செய்து முடித்தனர்.
Advertisment
The saga of the bull elk with a tire around its neck is over. Thanks to the residents just south of Pine Junction on CR 126 for reporting its location, wildlife officers were able to free it of that tire Saturday.
எல்க் ஆண் மான் ஒன்று கழுத்தில் டையருடன் சுற்றி வந்த நாட்களுக்கு முடிவு கிடைத்துவிட்டது. பைன் ஜங்ஷனில் வசிக்கும் மக்கள், வனத்துறையினர் ஆகியோருக்கு நன்றி. அவர்கள் அந்த டையரை நீக்கி மானுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் என்று பூங்காவின் நிர்வாகிகள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை நீக்குவதில் எங்களுக்கு அதிகம் சிரமங்கள் இருந்தது. 600 பௌண்டுகள் எடை கொண்ட அந்த எல்க்கின் கழுத்தில் இருந்து டையரை அறுத்து எடுப்பதில் நிறைய சிக்கல்கள் நிலவின. டையரை நீக்கிய பிறகும் அதி இருக்கும் எஃகு பகுதியை நீக்க முடியவில்லை. ஆனாலும் அதனை மானின் கழுத்து வழியே நாங்கள் வெளியே எடுத்துவிட்டோம் என்று முர்தோச் கூறினார். அவரும் அவருடன் பணியாற்றும் டாவ்சன் ஸ்வானும் இந்த மான் பைன் ஜங்கஷனில் சுற்றியதை பார்த்து உடனுக்குடன் விரைவில் செயல்பட்டு மானை காப்பாற்றியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil