அண்ணே இருந்தாலே வைப் தான்; கிங்காங் வீட்டு திருமணத்தில் ஒலித்த சின்ன கவுண்டர் பாடல்; நடிகரை தூக்கி இடுப்பில் வைத்த ஜெயகுமார்!

அப்போது, அவர் நடிகர் கிங்காங்கை தனது இடுப்பில் தூக்கிக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

அப்போது, அவர் நடிகர் கிங்காங்கை தனது இடுப்பில் தூக்கிக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

author-image
WebDesk
New Update
Comedy actor king kong daughter wedding reception

Comedy actor king kong daughter wedding reception

நகைச்சுவை நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 10 ஆம் தேதி காலை, பெசன்ட் நகரில் உள்ள கோவிலில் எளிமையாக திருமணம் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
 
இந்த நிகழ்வில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு தருணம் அரங்கேறியது.

Advertisment

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாழ்த்து!

முன்னாள் ஆதிமுக அமைச்சர் ஜெயகுமார் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, அவர் நடிகர் கிங்காங்கை தனது இடுப்பில் தூக்கிக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. 

Advertisment
Advertisements

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் கிங்காங். 

முன்னதாக தனது மகள் கீர்த்தனாவின் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர், சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்டோருக்கு நேரில் சென்று வழங்கியிருந்தார். 
சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடை உரிமையாளர் கிங்காங்கின் மகள் திருமண செலவுக்கு நிதி உதவி செய்ததுடன், மற்றவர்களும் அவருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

மணமக்கள் கீர்த்தனா மற்றும் நவீன் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Minister Jayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: