மும்பை லோக்கல் ரயிலில் அமர்வதற்கு சீட் கிடைப்பது என்பது எளிதான காரியம் அல்ல, குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில், ஆலையில் சிக்கிய கரும்பு கதைதான். மும்பை லோக்கல் ரயிலில் ஒரு சீட் பிடிப்பதில் பயணிகள் நீண்ட காலமாக பலவிதமான யுக்திகளைப் பயன்படுத்தினர். ரயில் நிற்பதற்கு முன்பே ஏறி இடம் காலியாக இருந்தால் பிடித்துக்கொள்வார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு பயணி தனது வித்தியாசமான முயற்சியின் மூலம், லோக்கல் ரயிலில் அமர்வதற்கு கையில் ஸ்டூலுடன் வந்து சக பயணிகளை ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Commuter brings his own seat on crowded Mumbai local, wins hearts with viral ‘jugaad’
வீடியோவில் அந்த பயணி கையடக்க மடித்து வைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டூலுடன் நெரிசலான ரயிலில் ஏறுவதைப் பார்க்க முடிகிறது. அவர் தனது பையைக் கவனமாகத் திறந்து, ஒரு சிறிய பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து, அதை விரித்து, நிரம்பி இருந்தாலும் அமர்ந்திருப்பதை மற்ற பயணிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவரைச் சுற்றி நடக்கும் சலசலப்புகளால் பாதிக்கப்படாமல் அவர் தொடர்ந்து அமர்ந்திருக்கிறார்.
யாரோ தன்னை வீடியோ எடுக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்த நபர் வெற்றிச் சின்னத்தைக் காட்டி சிரிக்கிறார்.
வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாகிராம் பயனர் போரிவலி சர்ச்கேட் பஜன் (@borivali_churchgate_bhajan) பகிர்ந்துள்ளார், இந்த வீடியோ ஏற்கனவே 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, சமூக ஊடகங்கள் முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றுள்ளது.
ஒரு பயனர் எழுதினார், “அங்கிள் பிரமாதம்’ எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இந்த ரகசிய நுட்பம் மும்பைக்கு வெளியே தெரியாது” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபர், “அவர் சரியான ஒன்றைக் கண்டுபிடித்தார்” என்று கூறினார்.
சமீபத்தில், ரயிலில் பயணி ஒருவர் ஒரு ஊஞ்சல் படுக்கையைப் பிண்ணி படுத்துக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ரயிலில் இரண்டு மேல் படுக்கைகளுக்கு இடையே தடிமனான கயிற்றால் படுக்கையைப் பிண்ணி தற்காலிக படுக்கையை அமைத்தது மட்டுமல்லாமல், உறுதியான, சௌகரியமான ஒன்றை உருவாக்கி இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.