Advertisment

கலிபோர்னியாவில் பொழிந்த பணமழை; சாலையில் அள்ளிய மக்கள்

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாலையில் எடுத்த பணத்தை திருப்பி தராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
கலிபோர்னியாவில் பொழிந்த பணமழை; சாலையில் அள்ளிய மக்கள்

பணத்துக்காக தினந்தோறும் ஓடிக்கொண்டிக்கும் நாம், இப்போ பணமழை பொழிந்தால் எப்படி இருக்கும் என நினைக்காத நாள் இருக்காது. ஆனால், இந்த பணமழை தெற்கு கலிபோர்னியாவில் நிஜமாகியுள்ளது.நெடுஞ்சாலையில் பயணித்த மக்கள்,சாலையில் சிதறி கிடந்த பணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

அனைவரும் வாகனங்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, பணத்தை எடுத்திட அலைமோதினர். இதனை வீடியோ எடுத்து பகிர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் டெமி பேக்பி, " இது மிகவும் விநோதமான நிகழ்வு. யாரோ பணத்தை சாலையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். சான்டியோகாவே ஸ்டாப் ஆகியுள்ளது என கூறியபடியே, கேமராவை திருப்பிட மக்கள் முந்தியடித்து கொண்டு சாலையில் கிடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணத்தை ஆர்வமுடன் எடுப்பதைக் காண முடிகிறது.

இவ்வழியாக டிரக் ஒன்றில், பணக்கட்டுகள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது ட்ரக்கின் கதவு திடீரென திறந்ததில் பணக்கட்டுகள் சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாலையில் எடுத்த பணத்தை திருப்பி தராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

இதுகுறித்து கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து (CHP)அதிகாரி சார்ஜென்ட். கர்டிஸ் மார்ட்டின் கூறுகையில், " இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் நடந்துள்ளது. சான் டியாகோவிலிருந்து ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் அலுவலகத்திற்கு சென்ற டிரக்கின் ஒரு கதவு திறந்ததில், பணப் பைகள் கீழே விழுந்துள்ளன. 1 டாலர் மற்றும் 20 டாலர் நோட்டுகள் சாலையில் சிதறியுள்ளது. பணத்தை எடுத்தவர்கள் உடனடியாக திருப்பி தர வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து, பலர் பணத்தை திருப்பி அளித்ததாகவும், ஒரு சிலர் பணத்தை இன்னும் திரும்பிக் கொடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் பணம் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளன. அதனடிப்படையில், உங்களை முகம் மற்றும் வாகன விவரங்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறை திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய எஃப்பிஐயுடன் கைகோர்த்துள்ளது.

கிடைத்த தகவலின்படி, காவல் துறையும் எச்சரித்தும் பணத்தை தராத இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018இல் இதே மாதிரியான நிகழ்வு நியூ ஜெர்சியில் நடந்துள்ளது. அப்போது, ட்ரக்கில் பின்கதவு பழுதடைந்ததில், ரூபாய் நோட்கள் சாலையில் சிதறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Money California Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment