சாட்ஜிபிடி மூலம் போலியாக சாலை உருவாக்கி ஏமாற்றிய காண்டிராக்டர்? -வைரலாகும் வீடியோ!

சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி தத்ரூபமாக சாலையை உருவாக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது நிஜமாக நடைபெற்றதா? அல்லது கற்பனைக்காக உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து வீடியோவில் விளக்கமில்லை.

சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி தத்ரூபமாக சாலையை உருவாக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது நிஜமாக நடைபெற்றதா? அல்லது கற்பனைக்காக உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து வீடியோவில் விளக்கமில்லை.

author-image
WebDesk
New Update
Chat GPT road

சாட்ஜிபிடி மூலம் போலியாக சாலை உருவாக்கி ஏமாற்றிய காண்டிராக்டர்? -வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோவில், ரோடு காண்டிராக்டர் யாரும் கற்பனை செய்து பார்க்காத வகையில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார். சாலை போடுவதற்கு பதில் பழைய சாலையின் போட்டோவை வைத்து புதிதாக சாலை போடப்பட்டதுபோல சாட்ஜிபிடியில் போலியாக போட்டோவை உருவாக்கியிருக்கிறார். அவர் அத்துடன் நிற்கவில்லை. சாட்ஜிபிடி போட்டோவை பொறியாளருக்கு அனுப்பி,  சாலை போடப்பட்டதாக கூறுகிறார். இதனையடுத்து அவர் காண்டிராக்டரை பாராட்டியிருக்கிறார். வீடியோவின் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை. ஆனால் போட்டோ உண்மையான சாலை போல தத்ரூபமாக இருக்கிறது. இது நிஜமாக நடைபெற்றதா? அல்லது கற்பனைக்காக உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து வீடியோவில் விளக்கமில்லை.

Advertisment

வீடியோவில், கிராமத்தின் செப்பனிடப்படாத சாலையை புகைப்படம் எடுப்பதை நீங்கள் காணலாம். அதன் பிறகு, அதை ஒரு புதிதான சாலை போல மாற்றுமாறு சாட்ஜிபிடியிடம் பிராம்ப்ட் செய்கிறார். அதைக் கேட்டதும் சாலையை புதிய கான்கிரீட் சாலையாக மாற்றி காண்டிராக்டருக்கு அனுப்புகிறது. அது நிஜமான சாலையை போல இருக்கிறது. பின்னர் அவர் தனது பொறியாளருக்கு அனுப்ப அவர் சாலையை பார்த்து ஒப்புதல் வழங்கும் விதமாக தம்ஸ்அப் காட்டுகிறார். இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. ஆனால் சாட்ஜிபிடி ஒரிஜினலாக ஒரு சாலையை உருவாக்குவதைப் பார்த்தால் நிஜத்தில் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.  இந்த காணொளியை naughtyworld இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மில்லியன் கணக்கானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். பலர் கமெண்டில் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: