New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/z819.jpg)
Nesamani vadivelu vignesh prabakar
Nesamani vadivelu vignesh prabakar
'நேசமணி' எனும் ஹேஷ்டேக் நேற்றிலிருந்து (மே.29) இந்தியளவில் டிரெண்டிங் ஆக, பலரும் தொலைபேசியில் அழைத்து, 'யாருப்பா அந்தே நேசமணி? அவருக்கு என்னாச்சு?' என்று அக்கறையாக விசாரிக்க, பிரெண்ட்ஸ் படத்தின் வடிவேலு காமெடியை சொன்னபிறகு, 'அடப்பாவிகளா இவிங்களுக்கு வேற வேலையே இல்லையா?' என்று சலித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தனர்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு வடிவேலுவின் ஒரு காமெடி இந்தளவுக்கு வைரலாகி இருக்கிறதே என்று எடுத்துக் கொள்வதா?
அல்லது
இந்தியளவில் டிரெண்டிங் செய்யப்பட்ட நேசமணியை பார்க்கையில் சமூக தளங்களில் இத்தனை பேர் சும்மா இருக்காங்களா? அவங்களுக்கு வேலை ஏதும் இல்லையோ என்று எடுத்துக் கொள்வதா?
அல்லது
வடிவேலுக்கு பிறகு காமெடியில் ஜாம்பவான்கள் யாரும் இல்லை என்பதாக இதை எடுத்துக் கொள்வதா?
அல்லது
தமிழகத்தை சுற்றி வரும் பல பிரச்சனைகளை கூட இந்தளவுக்கு டிரெண்ட் செய்யாத இணையவாசிகள், நேசமணியை டிரெண்ட் செய்திருக்கிறாகள் என்றால், நம் மக்களின் சீரியஸ்னஸ் அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்வதா?
அல்லது
இதுவும் ஒரு பொழுதுபோக்கு தான்; சிரிச்சிட்டு அடுத்த வேலையைப் போய் பாருங்கப்பா என்று சிலர் சொல்வது போல் கடந்து செல்வதா? என்று புரியவில்லை.
ஆனால், இந்த நேசமணி எனும் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தது விக்னேஷ் பிரபாகர் எனும் இளைஞர். இவர் தனது நண்பருடன் சுத்தியலைப் பற்றி காமெடியாக கமெண்ட் செய்ய, அதுவே இப்போது தேசியளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.
'சத்தியமா நா இதை எதிர்பாக்கலை' என்று சத்தியம் செய்து பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நேசமணி எப்படி வைரலானது என்பது குறித்தும், மக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் என்ன சொல்கிறார் என்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்க.
காண்ட்ராக்டர் நேசமணியை யாராச்சும் காப்பாத்துங்க, ப்ளீஸ்!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.