New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/pugaz-pavi.png)
விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் தொடர்பான நிகழ்ச்சியை இவ்வளவு சுவாரசியமாக கொண்டு செல்ல முடியுமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் விரைவிலேயே ரசிகர்களை கவர்ந்தன. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அவர்கள் செய்யும் காமெடிகள், கிறுக்குத்தனங்கள், கவுண்டர்கள் ரசிகர்களை சிரிக்க செய்து வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் இதுதான் டாப் லிஸ்ட்டில் உள்ளது.
இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்டு போட்டியில் 4 வது இறுதி போட்டியாளராக ஷகீலா வெற்றி பெற்றார். ஒருவர் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்ற நிலையில் 5 வது இறுதி போட்டியாளராக பவித்ராலக்ஷ்மி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வாரம் இறுதி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் செலிப்ரேஷன் வீக் என்று குக்குகள் எல்லாம் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இதில் பவித்ரா ஒரு ஆண் நண்பருடன் வந்ததை பார்த்து புகழ் ஷாக்கானார். இந்த சீசன் முழுவதும் புகழ் பவித்ரா காம்பினேஷன் சிறப்பாக இருந்தது. எனவே அந்த நபர் பவித்ராவின் காதலரா என்று பலரும் கேட்டு வந்தனர், இப்படி ஒரு நிலையில் அந்த நபர் யார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என் குடும்பத்தினர் யாரும் இந்த வாரம் சென்னையில் இல்லை. அதனால், நிகழ்ச்சிக்கு என்னுடன் வந்தவர் என் நண்பர் சுதர்சன். நன்றி மா, சமைக்க தெரிஞ்ச ஒரே நண்பர் நீங்கள் தான். என்னுடைய ’அகில உலக சூப்பர் ஸ்டார்’ இவரைப் போல் நண்பர் எல்லோருக்கும் தேவை, என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பவித்ரா மற்றும் சுதர்சன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம். அந்த வீடியோ இதோ.
இது ஒரு புறம் இருக்க பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுதர்சன், பவித்ராவும் நானும் ஒரு சில விளம்பரங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அது போக நானும் அவரும் நல்ல நண்பர்கள். எங்களை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே எங்களை பற்றி நன்றாக தெரியும் ஆனால், ப்ரோமோவை மட்டும் பார்த்து விட்டு ஒரு சிலர் புகழுக்கும் பவித்ராவுக்கு நடுவில் நான் வந்துவிட்டது போல திட்றாங்க, அதிலும் புகழ் ரசிகர்கள் உண்மை என்னவென்று புரியாமல் பேசுகிறார்கள்.அவர்களுக்கு முழு எபிசோடும் பார்த்தால் தான் உண்மை புரியும் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.