விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் அஸ்வின் பற்றி மற்றொரு போட்டியாளரான நடிகை ஷகிலாவின் மகள் தனது இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் சனி, ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி ஒரு சமையல் காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்கள் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பாட் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களுக்கு சமையல் டாஸ்க்குகளை கொடுக்கின்றனர். இதில் குக்காக பங்கேற்கும் போட்டியாளர்களுடன் கோமாளிகளும் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டாகள் பார்வையாளர்களை தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டுவிடுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா டைட்டிலை தட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி 2வது சீசன் தொடங்கப்பட்டது. இதில், குக் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் பங்கேற்றனர். புகழ், பாலா, சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி ஆகியோர் கோமாளிகளாகவும் பங்கேற்று நிகழ்ச்சியில் கலக்கி வருகின்றனர். இந்த போட்டியாளர்களில் சிலர் போட்டி விதிகளின்படி எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வருவதால் விரைவில் முடிவடைந்துவிடுமோ என்ற கவலை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்கள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முடிக்காதீர்கள் என்று கூறிவருகின்றனர். இதனால், நிகழ்சிக் குழுவினரும் வைல்ட் கார்ட் மூலமாக புதிய போட்டியாளர்களை நிகழ்ச்சியில் களமிறக்கி வருகின்றனர். சமீபத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மற்றொரு நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பலரும் புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இதில், போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் நடிகை ஷகிலா கவர்ச்சி நடிகை என்ற இமேஜை உடைத்துள்ளார். குக் வித் கோமாள் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவரும் ஷகிலாவை அம்மா என்றே அழைத்து வருகின்றனர்.
நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகளான மில்லாவை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மில்லா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகிலாவுடன் போட்டியாளராக பங்கேற்ற அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பற்றி மில்லா குறிப்பிடுகையில், “அஸ்வின் என்னுடைய இன்னொரு தாய்க்கு பிறந்த சகோதரர்”என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஷகிலாவின் மகள் மில்லாவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு ரசிகர்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.