அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற தமிழகம் வந்து தற்போது சென்னையிலே செட்டிலாகிவிட்டார். விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்று சிறப்பாக நடனம் ஆடி வந்தார். கடைசியாக நடந்த ஜோடி ஃபன் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். மேலும் விஜய் டிவியின் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பலத்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் பங்கேற்கும் அனைவருமே அருமையாக காமெடி செய்வதால் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார்கள். அதில் கோமாளியாக வரும், புகழ், சிவாங்கி, பாலா, தங்கதுரை போன்றோர் சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் புதிய கோமாளியாக வந்தவர் சுனிதா. இவரது அருமையான நடனம், தப்பு தப்பான தமிழ் பேச்சு, அஸ்வினிடம் கவிதை சொல்வது போன்ற செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சுனிதா சொந்தமாக ஒரு YouTube சேனலை தொடங்கியுள்ளார். அதில் முதல் வீடியோவாக, தற்போது இணையத்தில் செம ஹிட்டான, தீ மற்றும் அறிவு இருவரின் ஆல்பமான ’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடி வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil