கொரோனா மருந்து ஆராய்ச்சிக்காக நிதிதிரட்ட மாரத்தான் செல்லும் 103 வயது இளைஞர்
103-year-old Belgian walks marathon : நான் இந்தவயதில் மாரத்தான் செல்வது இயலாத காரியம் என்று எனது பேத்தி தெரிவித்திருந்த நிலையில், நான் அதையே சவாலாக ஏற்று இந்த நடைப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
103-year-old Belgian walks marathon : நான் இந்தவயதில் மாரத்தான் செல்வது இயலாத காரியம் என்று எனது பேத்தி தெரிவித்திருந்த நிலையில், நான் அதையே சவாலாக ஏற்று இந்த நடைப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் பொருட்டு, 103 வயதான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த டாக்டர், மாரத்தான் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம், சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Advertisment
பெல்ஜியத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற டாக்டர் அல்போன்ஸ் லீம்போயல்ஸ், 42.2 கி.மீ. தொலைவை நடந்து அதன்மூலம் திரட்டப்படும் நிதியை, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தினமும் 159 யார்ட்ஸ் தொலைவு நடந்துவரும் லீம்போயல்ஸ், தான் செல்லும் வழியில், குச்சிகளை ஊன்றிக்கொண்டே வருகிறார். ஜூன் 1ம் தேதி துவங்கியுள்ள இந்த மாரத்தான், 30ம் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பிரிட்டன் படைத்தளபதி 100 வயதான டாம் மூரே, தனது தோட்டத்தில் நடந்ததன் மூலம் சேகரித்த 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை, அந்நாட்டின் சுகாதாரப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கினார்.
அவரை பின்பற்றியே, தான் இந்த மாரத்தான் நிகழ்வை தொடங்கியுள்ளதாக லீம்போயேல்ஸ் தெரிவித்துள்ளார்.
நான் இந்தவயதில் மாரத்தான் செல்வது இயலாத காரியம் என்று எனது பேத்தி தெரிவித்திருந்த நிலையில், நான் அதையே சவாலாக ஏற்று இந்த நடைப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தின் லியூவென் நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில், கோவிட் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும்பொருட்டு தான் இந்த மாரத்தானில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil