கொரோனா மருந்து சோதனையை முடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – நெட்டிசன்களின் உலகமே தனிதான்

Russia Covid vaccine trials : இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளை அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களில் அரசின் அனுமதியுடன் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

By: July 13, 2020, 4:26:59 PM

சர்வதேச நாடுகளில் முதல்முறையாக கொரோனா தொற்று பாதிப்பை தீர்க்கவல்ல தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்யாவின் மாஸ்கோ செச்னாவ் பல்கலைகழகம் அறிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள், அதனை மீம்களாகவும், ஜோக்குகளாகவும், சமூகவலைதளங்களில் அதனை வெளியிட்டு வருகின்றனர்.

தங்களது இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று #vaccine என்ற ஹேஷ்டேக்கின் மூலம் தெரிவித்துள்ள ரஷ்ய செய்தி ஏஜன்சி நிறுவனம், சோதனைக்குள்ளான மனிதர்கள் ஜூலை 15 மற்றும் 20ம் தேதிகளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தலைமை விஞ்ஞானி எலீனா மோல்யார்சுக் தெரிவித்துள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TASS என்ற ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதற்கட்டமாக 19 பேருக்கு இந்த சோதனை, ஜூன் 18ம் தேதி நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது சோதனை, ஜூன் 23ம் தேதி 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனிகா மற்றும் சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனங்களின் குழு தயாரித்துள்ள சினோபார்ம் மருந்தின் சோதனைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாடர்னா நிறுவனமும், இந்த மாதத்தின் இறுதிக்குள் இறுதிக்கட்ட சோதனையை நடத்த உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் படி, சோதனை நிகழ்த்தப்பட்ட 19 பேரின் மருத்துவ மதிப்பீட்டு சோதனை முடிவுகளை, கடந்த 6ம் தேதி வெளியிட்டிருந்தது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அறிவித்து வரும்நிலையில், இதுதொடர்பாக, சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துகள்

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளை அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களில் அரசின் அனுமதியுடன் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யாவில், கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,27,162 ஆக உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் 11,335 பேர் மரணமடைந்துள்ளனர். சர்வதேச அளவில், கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – How netizens reacted to Russian university claiming it completed Covid-19 vaccine trials

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus covid vaccine russia moscow university social networks netizens

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X