ஆன்லைன் வகுப்பில் குழந்தையின் நிலை – அந்தோ பரிதாபம்! : வைரலாகும் பதிவு

Student fall asleep online class : ஜூம் போன்ற செயலிகள் வழியிலான ஆன்லைன் அல்லது வீடியோ மீட்டிங்குகள் மற்றும் வகுப்புகளில் பெரியவர்களாகிய நாமே 10 முதல் 15 நிமிடங்களில் சோர்வடைந்து விடுகிறோம்.

By: August 11, 2020, 4:56:25 PM

கொரோனா தொற்று பரவல் காரணமாக , அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங்குகள், பள்ளி வகுப்புகள் உள்ளிட்டவைகள் வீடியோ கான்பரன்சிங் முறையிலேயே நடைபெற்று வருகின்றன. இந்த வீடியோ கான்பரன்சிங் வழியிலான மீட்டிங்குகள் , சிறிதுநேரத்திலேயே நம்மை சோர்வடைய செய்துவிடுகின்றன. நமக்கே இந்த நிலை என்றால், பிஞ்சுத்தளிர்களான குழந்தைகள் படும்பாடு சொல்லி மாளாது. அந்தளவிற்கு ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் படாதபாடு பட்டுவருகின்றனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காரா மெக்டோவலின் கண்காணிப்பில் உள்ள பையன், வீடியோ கான்பரன்சிங்கிலான வகுப்பில் இருக்கையிலேயே படுத்து உறங்குவது போல வெளியிட்ட போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதில் வேடிக்கை என்னவென்றால், குழந்தை திரையில் இல்லாத நிலையிலும் ஆசிரியர் தொடர்ந்து பாடம் நடத்தி வருவதுதான்…

இந்த போட்டோ, சமூகவலைதளங்களில் பலரால் பொழுதுபோக்கிற்காக பகிரப்பட்டு வந்தாலும், ஒரு கடினமான வாதத்தை இந்த போட்டோ துவக்கிவைத்துள்ளது என்றே கூற வேண்டும். அதுயாதெனில், வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நிலையை விவரிக்கும் படமாக இது அமைந்துள்ளது.

அதே குழந்தைக்கு பிடித்த ஒரு பொம்மையை அருகில் வைத்துக்கொண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றால், அவன் நீண்டநேரம் சுறுசுறுப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ள காரா, அந்த படத்தையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜூம் போன்ற செயலிகள் வழியிலான ஆன்லைன் அல்லது வீடியோ மீட்டிங்குகள் மற்றும் வகுப்புகளில் பெரியவர்களாகிய நாமே 10 முதல் 15 நிமிடங்களில் சோர்வடைந்து விடுகிறோம். இதன்மூலம் பள்ளி வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளின் போது குழந்தைகள் உறங்கும் நிகழ்வு பெரும்பாலான இடங்களில் நிகழ்ந்து வருகிறது. அர்ஜென்டினா நாட்டில் ஒரு இளைஞன், படுக்கையில் படுத்தபடி, ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது .ஆசிரியரும் அதை கண்டுகொள்ளாமல் பாடம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – The internet finds this photo of a child during a 40-minute video class ‘totally relatable’

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown online class virtual class student fall asleep online class

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X