Advertisment

முகக்கவசம் செய்து தரும் தையல்நாயகி - வைரலாகும் மாற்றுத்திறனாளி மாணவியின் செயல்

Homemade mask : முதலில் ஒரு கையை கொண்டு முககவசம் தைப்பது சிரமமாக இருந்தது, பின் தாயின் உதவியால், தற்போது முகக்கவசங்களை தைத்து வருகிறேன். 1 லட்சம் முகக்கவசங்களை தைத்து மற்றவர்களுக்கு வழங்குவதே தனது லட்சியம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, masks, Differently-abled girl, Homemade mask, Udupi, mask, Karnataka, COVID-19 Karnataka updates, Trending news, Indian Express news

corona virus, masks, Differently-abled girl, Homemade mask, Udupi, mask, Karnataka, COVID-19 Karnataka updates, Trending news, Indian Express news

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் செய்து தரும் மாற்றுத்திறனாளியின் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisment

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சிந்தூரிக்கு இடது கை முழுமையான வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இவர் அப்பகுதியில் னாள்ள மவுண்ட் ரோசரி பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

தன்னிடம் உள்ள குறையை பெரிதாக கருதாத சிந்தூரி, இந்த கொரோனா ஊரடங்கு விடுமுறையில், பள்ளி செல்லும் மாணவர்களுக்காக முகக்கவசம் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை அவர் கிட்டத்தட்ட 15 முககவசங்களை தயாரித்துள்ளார்.

சிந்தூரியின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டியுள்ள நிலையில், சமூகவலைதளங்களிலும் இவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

முதலில் ஒரு கையை கொண்டு முககவசம் தைப்பது சிரமமாக இருந்தது, பின் தாயின் உதவியால், தற்போது முகக்கவசங்களை தைத்து வருகிறேன். 1 லட்சம் முகக்கவசங்களை தைத்து மற்றவர்களுக்கு வழங்குவதே தனது லட்சியம் என்று சிந்தூரி , ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - 10-year-old differently-abled girl stiches masks for SSLC students, wins praise online

Corona Virus Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment