உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் திருமணம் – ரொம்ப ஓவராத்தான்டா போறீங்க

Trending video : திருமணம் தள்ளிப்போகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்கள் முன்னிலையில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட கிரேஸ் லெய்மனை, முனிஜ் கரம்பிடித்தார்

By: August 17, 2020, 4:54:32 PM

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த இளைஞர், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட இடத்திலேயே, திருமண பந்தத்தில் இணைந்த நிகழ்வு, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கார்லஸ் முனிஜ், கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, சான் ஆன்டனியோவில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் கடந்த மாதம் 11ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முனிஜ்க்கு, ஆகஸ்ட் 11ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததன் காரணமாக, முனிஜ் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவிலேயே இருந்துவந்தார். திருமணம் தள்ளிப்போகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்கள் முன்னிலையில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட கிரேஸ் லெய்மனை, முனிஜ் கரம்பிடித்தார். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளதோடு மட்டுமல்லாது, டிரெண்டிங் ஆகி வருகிறது.

முனிஜ்க்கு இதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படாமல் இருந்தது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாது, அவர் திருமணம் செய்வது வரைக்கும் அவர் தயாராகியுள்ளதாக KSAT.com பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முனிஜ் கோட், சூட் உடையிலும், கிரேஸ், மணப்பெண் உடையிலும் இருந்தனர். அவர்கள் இருந்த அறையே, திருமண மேடை போல மாற்றப்பட்டிருந்தது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் மட்டும், இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

முனிஜ், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையிலும், அவரது இதயம் மற்றும் நுரையீரல் இன்னும் சீராக இயங்காத காரணத்தினால், அவர் மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Man marries fiancee in hospital while undergoing treatment for COVID-19

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus usa marriage texas fiancee covid video trending covid

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X