அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்தபோது முக கவசம் அணிந்திருந்தார். பொதுவெளியில், முகக்கவசம் அணிந்து டிரம்ப் இருப்பது இதுவே முதல்முறை ஆகும். அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், டாக்டர்களின் அறிவுரைக்கேற்ப, டிரம்ப் முககவசம் அணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் நகரின் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில், கொரோனா நோயாளிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காயமடைந்த வீரர்கள், பாதுாப்பு பணியாளர்களை சந்திப்பதற்காக, அதிபர் டிரம்ப் வந்தார். அப்போது அவர் முககவசம் அணிந்து வந்த நிகழ்வு, பார்ப்போருக்கு புதுவித அனுபவமாக இருந்தது.
கொரோானா தொற்றின் தாக்கம் இப்போது தான் டிரம்புக்கு புரிந்துள்ளதாக நெட்டிசன்களில் ஒருதரப்பினர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் பெரும்பாலானோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதுதான், டிரம்ப் முககவசம் அணிந்துள்ளதாக மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்களின் கருத்துகள் இதோ உங்கள் பார்வைக்கு
Better late than never.
— Zigmeister (@_Zigmeister_) July 12, 2020
How much orange paint did the mask wipe off?
— Tom Wolf (@twolf10) July 11, 2020
Pretty crazy that the president wearing a mask is big news.
— seatbythebeach® ???? (@seatbythebeach) July 11, 2020
130k say it is a little late.
— Yeri (@Notonesecond) July 11, 2020
The fool does in the end what the the wise does from the beginning
— Akinmade (@Kinzuah) July 11, 2020
He should a paper bag over his head ... Shame for not protecting the military
— Cidalia Borges (@borges_cidalia) July 11, 2020
Was THAT So HARD?? @realDonaldTrump
WEAR a MASK ???? • SAVE a LIFE— The Resistor Sister ♥️???????????????????? (@the_resistor) July 11, 2020
Him following medical protocol in a hospital during an epidemic shouldn't be news
— surecantpickem (@surecantpickem) July 11, 2020
140,000 deaths too late
— ????????Melissa Jane???????? (@Melissa_Jane57) July 11, 2020
The bar is so low.
— Millard Fillmore (@Millard_Filmoor) July 11, 2020
It’s a sad state of affairs when this is actually major news.
— Jess Balzer (@jessicajbalzer) July 11, 2020
He looks a lot better with his mouth covered
— Marina Mintz (@good_going) July 11, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில், முக கவசம் அணிய அனைவரும் வற்புறுத்தியிருந்தபோது, டிரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், மற்ற அமைச்சர்கள் முககவசம் அணிந்தும், மற்றவர்களை அணிய வலியுறுத்தியும் வந்தனர்.
முக கவசம் அணிவது அவரவர் விருப்பம். இந்த விவகாரத்தை சமூக ஊடங்கங்களில் பேசி பெரும்விவாதப்பொருளாக்கிவிட வேண்டாம் என்று மக்களுக்கு வடக்கு டகோட்டா மாகாண கவர்னர் டவுக் புர்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில், ஜாதி பாகுபாடு அதிகரித்து வரும் நிலையில் டகோட்டா கவர்னரின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.