Coronavirus-inspired murals and public art from around the globe : உலகெங்கும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. இந்த நோய் பரவலில் இருந்து தப்பிக்க மக்கள் தங்களால் இயன்ற அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் தனித்தனியான சூழலில் தான் வாழ்கின்றோம். ஆனாலும் நாம் அனைவரும் இந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு வருவோம் என்று நாம் தீர்க்கமாக நம்ப வேண்டும். அதற்காக உழைக்கவும் வேண்டும். இந்த சூழல் உலக மக்களை எவ்வாறான சூழலுக்கு ஆளாக்கியுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உலகெங்கிலும் சுவர் ஓவியங்கள் வரைந்து வருகிறார்கள் ஓவியர்கள். அவற்றில் சில இங்கே
மேலும் படிக்க : சீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்
டச்சு நாட்டு ஓவியரான ஜொஹன்னெஸ் வீர்மீர் வரைந்த முத்துக் காதணி அணிந்த பெண் ஓவியத்தை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டது. அந்த பெரிய சுவர் ஓவியத்திற்கு தற்போது மாஸ்க் வரைந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் சுவர் ஓவியம் ஒன்றில் மருத்துவரும், ”திட்டங்களை ரத்து செய்யுங்கள், மனித நேயத்தை இல்லை” என்ற எழுத்தோவியமும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
ஹங்கேரி நாட்டில் வரையப்பட்ட சுவரோவியமும், அதன் முன்னே நடந்து செல்லும் முகமூடி அணிந்த மனிதனும்
கென்யாவின் நைரோபியில் அமைந்திருக்கும் மாதரே ஸ்லம் பகுதியில் வரையப்பட்ட ஓவியமும், ஓவியர் முசசியாவும்
கொலரேடோ மாகாணத்தில் அமைந்திருக்கும் டென்வர் பகுதியில் வரையப்பட்டுள்ள செவிலியர் சுவர் ஓவியம்.
மேலும் படிக்க : கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”