நிச்சயக்கப்பட்ட திருமணம் : கொரோனாவால் போனுக்கு தாலி கட்டிய மணமகன்!

கேரளத்தை சேர்ந்த நிச்சயக்கப்பட்ட ஜோடிகள் வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

கேரளத்தை சேர்ந்த நிச்சயக்கப்பட்ட ஜோடிகள் வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus lockdown Kerala couple get married through whatsapp video call

coronavirus lockdown Kerala couple get married through whatsapp video call

coronavirus lockdown Kerala couple get married through whatsapp video call : கொரோனா நோய் தாக்கம் உலகையே அதிர வைத்து வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளத்தை சேர்ந்த நிச்சயக்கப்பட்ட ஜோடிகள் வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisment

கேரள மாநிலம் கோட்டயம், சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். ஆலப்புழாவின் பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்த பொறியாளர் அஞ்சனா. இவர் தற்போது லக்னோவில் பணியாற்றி வருகிறார். இவ்விருவருக்கும் 26ம் தேதி வாட்ஸ்ஆப் கால் மூலம் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க : இவர்கள் நிஜ ஹீரோக்கள் : சென்னையில் இறந்தவரை 3000 மைல்கள் பயணித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தமிழர்கள்!

Advertisment
Advertisements

இவ்விருவரின் வீட்டாரும் ஏப்ரல் 26ம் தேதி, இருவருக்கும் திருமணத்தை நிச்சயம் செய்தனர். ஆனால் கொரோனா மற்றும் தொடர் ஊரடங்கு உத்தரவால் நினைத்து போன்று திருமணம் நடைந்தேறவில்லை. இந்நிலையில் வீடியோ காலில் திருமணத்தை நடத்த இருதரப்பினரும் முடிவு செய்தனர்.

மணப்பெண் லக்னோவில் இருக்க, மணமகன் கோட்டயத்தில் இருந்து போனுக்கு தாலி கட்டினார். உடனே அஞ்சனா தன் கையில் இருந்த தாலியை அவர் கழுத்தில் கட்டிக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: