கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளியாக இளைஞர் செய்த பிராங் வீடியோ, அவரை சிறைவாசம் அனுபவிக்க வைத்த சம்பவம், ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.
ரஷ்யா மெட்ரோ ரயிலில், Covid 19 (கொரோனா வைரஸ்) பாதிக்கப்பட்ட நோயாளி போன்று நடித்து பிராங்க் செய்த இளைஞரை கைது செய்த மாஸ்கோ போலீசார், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Когда пранк вышел из-под контроля!
В Москве задержали шутника, разыгравшего в метро приступ коронавируса. Полиция попросила Черемушкинский суд столицы арестовать молодого человека. pic.twitter.com/fmT17RUijQ
— ВЕСТИ (@vesti_news) February 10, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இது சீனா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளையும் பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் இயங்கி வரும் மெட்ரோ ரயிலில், இளைஞர் ஒருவர், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதுபோன்று பிராங்க் வீடியோ செய்து சக பயணிகளை அச்சுறுத்திய சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இளைஞரின் இந்த செயலால் அச்சமுற்ற பயணிகள், உடனடியாக ரயிலை விட்டு வெளியேறினர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பிராங்க் வீடியோ செய்த இளைஞரை, மாஸ்கோ போலீசார் கைது செய்தனர்.. பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இளைஞரின் இந்த அநாகரீக செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus man faces 5 years jail after coronavirus prank on metro
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை