New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/cats-5.jpg)
Coronavirus outbreak Italy people singing Justin Bieber's Love Yourself went viral
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிக்கிட்டு வருது. கொரோனாவுக்கு பதிலா கொஞ்சம் அன்பையும் “ஸ்ப்ரெட்” பண்ணுவோமே!
Coronavirus outbreak Italy people singing Justin Bieber's Love Yourself went viral
உலகம் முழுவதும் அதி தீவிரமா கொரோனா பரவிக்கிட்டு வரதால, மக்கள் தங்களை சமூக வெளிகளில் இருந்து தனிமைப்படுத்திக்கிட்டாங்க. சீனா, கொரிய நாடுகளை தொடர்ந்து அதிக அளவு பாதிப்புகளை சந்தித்த நாடுன்னா அது இத்தாலி தாங்க. ஆனாலும் எவ்வளவு நேரம் தான் பூட்டிய வீட்டுக்குள்ள டிவியையும், செவுத்தையும் பாத்துக்கிட்டே இருக்கிறது.
மேலும் படிக்க : ’எங்களுக்கு ஏதாவது நடந்தால் சிபிஎஸ்இ பொறுப்பேற்குமா?’ கொதிக்கும் மாணவர்கள்
டிவி சேனல்கள் பார்த்தா உலகமே அழிஞ்சி போய்டுமோன்ற அளவுக்கு பயத்தை தூண்டிவிட்டுறாங்க. அய்யோ சாமி, இதையெல்லாம் தாங்கிக்கிட்டு, மனச கஷ்டப்படுத்த முடியாதுன்னு யோசிச்ச இத்தாலி காரங்க, ஒருத்தருக்கு ஒருத்தரு ஆறுதலா இருக்குறதுக்காக தினமும் ஏதாவது ஒரு நேரத்துல, தங்களின் வீட்டு பால்கனியில் நின்று பாட்டு பாட தொடங்கிறாங்க. அமெரிக்காவின் பாப் பாடகரான ஜெஸ்டின் பைபரின் ”லவ் யுவர்செல்ஃப்” என்ற பாடலை நேற்று அனைவரும் பாடி, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருந்துக்கிட்டாங்க. அந்த வீடியோவ இப்ப நீங்களும் பாருங்க.
A whole neighborhood in Italy is singing “Love Yourself” by Justin Bieber while they’re on lockdown and self-quarantined. #COVIDー19 pic.twitter.com/JFgctJb3uw
— shivi ???? (@rauhlmeezy) March 15, 2020
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிக்கிட்டு வருது. கொரோனாவுக்கு பதிலா கொஞ்சம் அன்பையும் “ஸ்ப்ரெட்” பண்ணுவோமே!
தனிமைப்படுத்தப்பட்டோம் என்கின்ற உணர்வே மக்களை கொன்றுவிடுகிறது. இத்தாலி மக்களின் சகோதரத்துவத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. உங்களின் வருத்தத்திலும், அன்பிலும் பங்கேற்கின்றோம் என்பதாகவே இந்த நிகழ்வினை நாம் எடுத்துக் கொள்வோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.