உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் எத்தனை முறை கை கழுவுகிறார் என்று தெரியுமா? இந்த வீடியோவைப் பாருங்கள்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் அடிக்கடி சோப்புடன் கைகளைக் கழுவுவது அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நபர் பலமுறை கைகளைக் கழுவ வேண்டும் என்றால், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தபின் ஒரு மருத்துவர் எத்தனை முறை கைகளை கழுவ வேண்டும்? அப்படி மருத்துவர்கள் எத்தனை முறை கை கழுவுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
சீனாவில் இருந்து ஒளிபரப்பாகும் குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், ஆரம்பத்தில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பாதுகாப்புக்காக பல கையுறைகளை அணிவார்கள். வீடியோவில், ஒரு மருத்துவர் முதலில் தனது கைகளை கழுவுகிறார், பின்னர், அவரது ஷூ அட்டைகளை கழற்றுகிறார். அவள் மீண்டும் கைகளைக் கழுவி, கையுறைகளின் முதல் அடுக்கைக் கழற்றுகிறார். பின்னர், மீண்டும் அவர் தனது கைகளை கழுவ வேண்டும்.
இதையடுத்து அந்த மருத்துவர், தனது கோட்டைக் அவிழ்த்துவிட்டு, மீண்டும் கைகளை கழுவுகிறார். உடனே அவர், தனது மருத்துவ கவுனின் தொப்பியைக் கழற்றி, மீண்டும் கடுமையாக கைகளைக் கழுவுகிறார். சரி, இந்த முறையில், அவர் தனது மருத்துவ அங்கிகள் கழற்றும் ஒவ்வொரு முறையும் கைகளை கழுவுகிறார். இவ்வாறு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவர் எத்தனை முறை கைகளை கழுவுகிறார் என்றால் அவர் 11 முறை கை கழுவுகிறார்.
ஆபத்தான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அர்ப்பணிப்புடன் பலமுறை கைகளைக் கழுவிக்கொண்டு தூய்மையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் மருத்துவர்களைப் பாராட்டி வருகின்றனர்.
ஓரிரு முறை கை கழுவுவதற்கே சலித்துக்கொள்ளும் சிலர் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த டாக்டர் எத்தனை முறை கைகளைக் கழுவுகிறார் என்று பாருங்கள். இப்படி தூய்மையாக இருப்பதன் மூலம் இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"