கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் காரணத்தால் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மெக்ஸிகோ நாட்டில் கொரோனா வைரஸை மையமாக வைத்து மூன்று குழந்தைகள் செய்து காட்டிய நடன நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் பல தரப்பட்ட மக்களை கவர்ந்து வருகிறது.
மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற ஒகாம்போ 2020 வருடாந்திர விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளில் ஒருவர் நாவல் கொவிட்-19 ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் போன்று உடையணிந்துள்ளார். ஒரு குழந்தை மருத்துவர் கதாபாத்திரத்திலும்,மற்றொரு குழந்தை செவிலியர் காதபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
Italy, Iran, China: Schools across the country closed for Coronavirus.
— PAISA TWEETS???????????????????????????????????????????????????????????????? ???????? (@PaisaTweets_) March 7, 2020
கையில் ஒரு பெரிய ஊசியோடு மருத்துவர்,கொரோனா வைரசைத் துரத்துகிறார். கொவிட்-19 கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, கைகளை நன்கு கழுவ வேண்டும் என்பதனை உணர்த்துவது போல செவிலியர் கதாபாத்திரம் உள்ளது.
இந்த வீடியோவை 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதை மறு ட்வீட் செய்துள்ளனர்.
இருப்பினும், கொரோனா வைரஸை சித்தரிக்கும் குழந்தையின் தலையில் சீன பாரம்பரிய தொப்பி இருப்பதைக் கண்ட நெட்டிசன்கள், இந்த வீடியோ இனவெறியைத் தூண்டும், இனவெறிக்கு வழிவகுக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Mexicans can’t ever take anything serious. I LOVE IT!
— Fryderyk Martínez (@FreddyyMartinez) March 7, 2020