கிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க திருப்பூர் மாவட்டம் கொரோனா தடுப்புக் குழு, திருப்பூர், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைத்துள்ள கிருமி நாசினி சுரங்கம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலக அளவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். 1637 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.
Advertisment
Advertisements
கோரொனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவிலும், உத்தரப்பிரதேசத்திலும் காவலர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மீது கிருமி நாசினி மருந்தை தெளித்தது விமர்சனத்துக்குள்ளானது.
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 1, 2020
இந்த நிலையில், திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க திருப்பூர் மாவட்டம் கொரோனா தடுப்புக் குழு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிருமிநாசினி சுரங்கம் அமைத்துள்ளது. அனைவரும் இந்த கிருமி நாசினி சுரங்காத்துக்குள் நுழைந்து சென்றுதான் காய்கறிகளை வாங்க முடியும். பொதுமக்கள் தங்கள் கைகளைக் கழுவியபின் இந்த கிருமி நாசினி சுரங்கத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும். அவர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சி இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் வரவேற்று பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் திருப்பூர் மாவட்ட கொரோனா தடுப்புக் குழு அமைத்துள்ள கிருமி நாசினி சுரங்கம் வழியாக பொதுமக்கள் சென்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் கிருமி நாசினி சுரங்கத்தில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"