இப்போ இது தேவை தானா? ஜே.சி.பியில் ரிசப்ஷன்… பழி வாங்கிய ஆப்பரேட்டர்

அப்போது என்ன ஜே.சி.பி. ஆப்பரேட்டர் என்ன நினைத்தாரோ என்னவோ அந்த பக்கெட்டை கவிழ்த்த இருவரும் கீழே இருந்த மேஜையின் மீது விழுந்து கிட்டத்தட்ட குறுக்கெலும்பை உடைத்துக் கொண்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

JCB operator, marriage, viral news, funny videos

Couple uses excavator as a seat at the wedding reception : தங்களின் திருமண பந்தத்தை ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரம்பிப்பார்கள், மிகவும் வசதி வாய்ப்புடையவர்கள் செழிப்பாகவும், ஆடம்பரமாகவும் தங்களின் திருமணத்தை நடத்திக் கொள்வார்கள். ஆனால் இங்கே ஒரு ஜோடியை பாருங்கள். கல்யான ரிசப்ஷனுக்காக ஒரு ஜே.சி.பி. ஒன்றை ஏற்பாடு செய்து அதன் பக்கெட்டில் அமர்ந்துள்ளனர் திருமண ஜோடிகள்.

மிகவும் அழகான வெள்ளை நிற கவுன் அணிந்து மணப்பெண் டக்ஸ் அணிந்துள்ள மணமகன் பக்கத்தில் அமர்ந்துள்ளார். மெரூன் நிற சாட்டின் துணி போர்த்தப்பட்ட அந்த ஜே.சி.பியின் பக்கெட்டில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்து வந்தனர். அப்போது என்ன ஜே.சி.பி. ஆப்பரேட்டர் என்ன நினைத்தாரோ என்னவோ அந்த பக்கெட்டை கவிழ்த்த இருவரும் கீழே இருந்த மேஜையின் மீது விழுந்து கிட்டத்தட்ட குறுக்கெலும்பை உடைத்துக் கொண்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த உன்னத கண்டுபிடிப்பிற்காக மணமக்களை பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் ஒரு சிலர் மணமக்கள் எவ்வளாவு மோசமாக காயம் அடைந்திருப்பார்கள் என்பதை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Couple uses excavator as seat at wedding reception what happens next has internet in splits

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com