மட்டன் பிரியாணி ரெடி... இது தி.மு.க-வின் கோவை.. போஸ்டருடன் வலம் வந்த தி.மு.கவினர்: வைரல் வீடியோ

தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கோவை வடக்கு தொகுதி தி.மு.க-வினர் மட்டன் பிரியாணி ரெடி இது தி.மு.க-வின் கோவை என்ற போஸ்டரையும் கையில் ஆட்டுக்குட்டியையும் எடுத்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கோவை வடக்கு தொகுதி தி.மு.க-வினர் மட்டன் பிரியாணி ரெடி இது தி.மு.க-வின் கோவை என்ற போஸ்டரையும் கையில் ஆட்டுக்குட்டியையும் எடுத்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
mutton biriyani

கோவை வடக்கு தொகுதி தி.மு.க-வினர் மட்டன் பிரியாணி ரெடி இது தி.மு.க-வின் கோவை என்ற போஸ்டரையும் கையில் ஆட்டுக்குட்டியையும் எடுத்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு கோவை வடக்கு தொகுதி தி.மு.க-வினர் மட்டன் பிரியாணி ரெடி இது தி.மு.க-வின் கோவை என்ற போஸ்டரையும் கையில் ஆட்டுக்குட்டியையும் எடுத்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாமல், தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பா.ஜ.க 23 இடங்களில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டது. 

தமிழகத்தில் பா.ஜ.க முக்கிய முகங்களை மக்களவைத் தேர்தலில் களமிறக்கியது. பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல். முருகன், அண்ணாமலை, பால் கணகராஜ், வினோஜ் பி செல்வம், ராதிகா, ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன் என களமிறக்கியது. இதனால், இந்த மக்களவைத் தேர்தல் பெரும் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த அண்ணாமலை 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 

Advertisment
Advertisements

கோவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றி உறுதியானபோது, கோவை வடக்கு தி.மு.க-வினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். மேலும், மட்டன் பிரியாணி ரெடி, இது தி.மு.க-வின் கோவை என்று அண்ணாமலையை விமர்சிக்கும் போஸ்டருடன் தி.மு.க-வினர் வலம் வந்தனர்.  

கோவை வடக்கு தொகுதி தி.மு.க-வினர் மட்டன் பிரியாணி ரெடி இது தி.மு.க-வின் கோவை என்ற போஸ்டரையும் கையில் ஆட்டுக்குட்டியையும் எடுத்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: