/indian-express-tamil/media/media_files/2025/01/19/kkX4wobI2VGOcHvbzsIB.jpg)
வீட்டிற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
கோவையில் உணவு தேடி வடமாநில இளைஞர்கள் தங்கி இருந்த அறையை சூறையாடிய ஒற்றைக் காட்டு யானையின் அதிர்ச்சி ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
கோவை, பெரியநாயக்கன்பாளையம், கூடலூர், கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட தெக்குபாளையம் திலகராஜ் என்பவர் சொந்தமான வீட்டில் அருகே உள்ள அறையில் நான்கு வடமாநில இளைஞர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
கோவையில் வீட்டுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை... #coimbatore#elephantpic.twitter.com/pPci7A9F63
— Indian Express Tamil (@IeTamil) January 19, 2025
அங்கு வந்த ஒற்றை காட்டு யானை அறைக்கு உள்ளே நுழைய முயன்று உள்ளது. முடியாததால் துதிக்கையால் எரிவாயு அடுப்பு மேல் குக்கரில் இருந்த உணவை கீழே தள்ளியும், அங்கு வைத்து இருந்த அரிசியை இழுத்துப் போட்டும் தின்றது அங்குள்ள வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும் உள்ளே உணவு தேடிய போது அங்கு இருந்த பொருட்களை கீழே இழுத்து போட்டு சூறையாடியது. அதனை அந்த அறையில் இருந்த வட மாநில இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.
அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.