New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/25/rDbwxU5OFCiQK8SjagCK.jpg)
கோவையில் கணவரை இழந்த பெண்ணிடம் கடனை திருப்ப செலுத்த கூறி நிதி நிறுவன ஊழியர் வீட்டின் முன் அமர்ந்து மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
கணவர் இறந்த நிலையில் வீட்டு கடன் பெற்ற பெண்ணிடம், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என இரவில் சென்று மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீடியோ காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா அவரது கணவர் ரவி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கணவர் ரவி உயிரிழந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கண்ணன் திருமணம் ஆகி தனியாக குடியிருந்து வருகிறார். அவரது இளைய மகன் விஜய் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 ஸ்டார் என்று தனியார் நிதி நிறுவனத்திடம் வீட்டுக் கடனாக ரூபாய் 4 லட்சம் பெற்று இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மஞ்சுளாவின் மகன் விஜய்யிடம் கடந்த ஜனவரி மாதங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியர் சரண் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மஞ்சுளாவின் மகன் விஜய் வெளியூர் சென்ற நிலையில் மார்ச் 23 நிதி நிறுவன ஊழியர்கள் மூன்று பேர் தவணைத் தொகை செலுத்த வேண்டும் என மிரட்டி சென்றார்.
மீண்டும் மார்ச் 24 காலை முதல் அவர் வீட்டின் முன்பு நிதி நிறுவன ஊழியர் தரணிதரன் என்பவர் அமர்ந்து கொண்டு இரவு 10 மணியே கடந்த பின்பும், தவணைத் தொகை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லையென்றால் இங்கு இருந்து நான் செல்ல மாட்டேன் என்று மிரட்டல் விடுத்து அங்கேயே அமர்ந்து கொண்டு உள்ளார்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த மஞ்சுளாவின் மகன் நிதி நிறுவன ஊழியரிடம் தவணைத் தொகை இன்னும் சில தினங்களில் செலுத்துவதாக கூறியும், வீட்டு வாசல் முன்பு அமர்ந்து மிரட்டல் விடுத்ததை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார்.
கணவரை இழந்த பெண்ணிடம் கடனை திருப்பி செலுத்த மிரட்டல்: வீட்டு முன் அமர்ந்து கொண்டு செல்ல மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள் #covai pic.twitter.com/eJDqkvl8WD
— Indian Express Tamil (@IeTamil) March 25, 2025
அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளையும் பின்பற்றாமல் தவணைத் தொகை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் நீதிமன்ற மூலம் சென்று தீர்வு காணாமல் இதுபோன்று தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இரவு வரை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அவர்கள் வீட்டுக்கு முன் இரவு பத்து மணி வரை அமர்ந்து அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசும், காவல் துறையினரும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கடன் வாங்கி தற்கொலையில் சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.