New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/28/eJq3OeU3jspJqSB9RmYG.jpg)
கோவையில் ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து
கோவையில் ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து
கோவை சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை அருகே தனியாருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் பெயிண்ட் விற்பனை செய்யும் கடையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை வி மேட்டூர் பொள்ளாச்சி- திருப்பூர் சாலையில் சுரேஷ் என்பவர் சொந்தமான பெயிண்ட் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையில் வேலை செய்து வரும் பணியாட்கள் வழக்கம்போல் இரவு எட்டு முப்பது மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில் சுமார் 9:30 மணி அளவில் அளவில் திடீரென கடையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட கடையின் காவலாளி உடனடியாக கடையின் உரிமையாளருக்கும் பணியாட்களுக்கும் தகவல் அளித்தார்.
கோவையில் ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து...பற்றி எரியும் தீயின் வீடியோ வைரல்#Coimbatore #fire pic.twitter.com/rJz9vwBTuP
— Indian Express Tamil (@IeTamil) February 28, 2025
மேலும் கடை தீப்பற்றி எரிவதைப் கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் மளமளவென கொளுந்து விட்டு எரிந்த தீயால் ஏற்பட்ட கரும்புகை விண்ணை முட்டியது.
பொள்ளாச்சி திருப்பூர் சாலை அருகே உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தகவல் இருந்த அக்கம்பக்கத்தினர் சாலையில் திரண்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே பொதுமக்கள் அளித்த பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை வேகமாக பிரித்து எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீ தொடர்ச்சியாக கொழுந்து விட்டு இறந்ததன் காரணமாக ஜேசிபி எந்திரம் அழைக்கப்பட்டு கடையில் முன்பக்க கதவுகள் கட்டப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து தீக்கரையாகின.
இதனிடையே தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த சுல்தான்பேட்டை போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.