போட்டியில் ஜெயிக்க தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய கோவை அணி வீரர்கள்!

அவரிடம் கோவை அணிக்கான ஜெர்சியையும் வழங்கினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் கோவை அணி வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 3வது சீசன், திருநெல்வேலியில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் களமிறங்கியுள்ளன. முதல் சீசனில் தூத்துக்குடி அணியும், 2017ல் நடைபெற்ற 2வது சீசனில் சேப்பாக்கம் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.

தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ள 3வது சீசனில் திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லிஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் என 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 32 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் திருநெல்வேலி , திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபி முகுந்தன் மற்றும் அணியின் வீரர்கள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற்னர். அவரிடம் கோவை அணிக்கான ஜெர்சியையும் வழங்கினர்.

கோவை அணி வீரர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கேப்டன் அபிமுகுந்தன் “ நாளை தங்கள் அணி பங்கேற்கும் போட்டி இருப்பதால் தலைவரை சந்தித்து நேரில் வாழ்த்து பெற வந்தோம். தமிழ்நாடு அளவில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்குகிறது” என்றார்.

×Close
×Close