covid-19, coronavirus, nurse explains cross-contamination, cross-contamination, coronavirus cases, covid-19 cases india, trending. indian express, indian express news
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், கையுறைகள் அணிந்திருந்தாலும் இந்த வைரஸ் தொற்று பரவும் என்பதை மிக்சிகன் நர்ஸ் ஒருவர் விளக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் நர்ஸ் மொய்லி லிக்ஸி. இவர் கொரோனா தொற்று பரவலை, பெயிண்ட் மூலம் எளிமையாக விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இப்போது பொதுவெளியில் பலர் கையுறைகள் அணிந்துள்ளதை காண்கிறேன். பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கையுறைகளை அணிந்தால் மட்டுமே தொற்றுவை தவிர்த்துவிட முடியும் என்று எண்ணிவிடாதீர்கள். நீங்கள் உங்கள் கைகளை சீரிய இடைவெளிகளில் சோப்பு கொண்டு கழுவாதவரை, நீங்கள் கையுறைகளை அணிந்தாலும் எவ்வித பயனுமில்லை. நீங்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சிறிதுநேரத்தில், கொரோனா வைரஸ் உங்கள் மீது தொற்றை ஏற்படுத்திவிடும்.
நோய்த்தொற்று என்பது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த தொற்றை, நீங்கள் கையுறை அணியும் அந்த சிறிதுநேர இடைவெளியிலும் உங்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் லிக்ஸி வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோவுக்காக நர்ஸ் லிக்ஸிக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் அதை வைரலாக்கியும் வருகின்றனர்.