Advertisment

வீடியோ கால்ல திருமணம், இன்னும் என்னென்ன பாக்கப்போறோமோ?.: வைரலாகும் வீடியோ

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரில், வீடியோ கால் மூலம், மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
covid-19, nikah, coronavirus, wedding, video conferencing, indian express

covid-19, nikah, coronavirus, wedding, video conferencing, indian express

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரில், வீடியோ கால் மூலம், மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, நாட்டில் வரும் 14ம் தேதி வரையிலான 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

பீகாரை சேர்ந்த சாடியா நஸ்ரீனுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் ரசாவுக்கும் கடந்த 23ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நாடுமுழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இவர்களால் திருமண மண்டபத்திற்கு வர இயலவில்லை. இதனையடுத்து, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, வீடியோ காலின் மூலம், மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.

இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்கள், வீடியோ காலின் மூலம் ஒருவரை ஒருவர் இன்றே நேரில் பார்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோடிக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment