கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் கோவிட்-19 நோயாளிகள் குரூப் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கோவிட்-19 நோயாளிகள் குரூப் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி நெட்டிசன்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில், ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்த கோவிட்-19 நோயாளிகள் ஒரே மாதிரியாக குரூப் டான்ஸ் ஆடுகின்றனர்.
முகக் கவசம் அணிந்த கொரோனா நோயாளிகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தபடி பிராந்திய மற்றும் பாலிவுட் இசைகு நடனமாடுவது வீடியோவில் தெரிகிறது.
#WATCH Karnataka: Asymptomatic #COVID19 positive patients organise a flash mob at a COVID care centre in Bellary where they are admitted. (19.07.2020) pic.twitter.com/30D6E4ESOV
— ANI (@ANI) July 20, 2020
இந்த வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொரோன நோயாளிகளின் மன உறுதியை தக்கவைக்கும்படி உற்சாகப்படுத்தியது.
கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கொரோனா வைரஸ் நோயாளிகள் ஏற்பாடு செய்து ஆடிய குரூப் டான்ஸை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Amazing..I love this kind of energy. Mentally they seem to be super strong. ????????????❤❤
— Dyutirmoy Pal (@i_am_dyuti) July 20, 2020
ஒரு நெட்டிசன், இதுதான் வலிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
Amazing..I love this kind of energy. Mentally they seem to be super strong. ????????????❤❤
— Dyutirmoy Pal (@i_am_dyuti) July 20, 2020
மற்றொரு நெட்டிசன் அற்புதம், இந்த உற்சாகத்தை விரும்புகிறேன். அவர்கள் மன ரீதியாக மிகவும் உறுதியாக காணப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இப்படி, பலரும் கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும்படியாக கம்மெண்ட் செய்துள்ளனர்.
Spirit of karnataka ????????????
Spirit of india ????????
— Bhavana Rao (@Bhavana17851510) July 20, 2020
Life must go on
— sonal1968 (@SonalSalabh) July 20, 2020
Super
Very happy to see the positive Vibes ❤️
— Kailash Jain (@cementbank) July 20, 2020
Why shouldn’t this be considered as an initiative by the asymptomatic to keep their morales high when they are confined? Shouldn’t we be looking at positives during these times?
— Raghuram Nittoor (@rcnittoor) July 20, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.