கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி நீண்ட நாள் தோழியுடன் திருமணம்; ரசிகர்கள் வாழ்த்து

வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
varun chakravarthy marriage, cricket player varun chakravarthy got married, வருண் சக்ரவர்த்தி, கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி திருமணம், varun chakravarthy married his girl friend, kkr player varun chakravarthy

ஐபிஎல் 2020 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்துள்ளார்.

Advertisment

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பங்கேற்று சிறப்பாக விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. தனது சுழற்பந்து வீச்சு மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

ஐபிஎல் போட்டிகள் நடந்துகொண்டிருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வருண் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. அப்போது, வருண் சக்ரவர்த்தி தான் தீவிர விஜய் ரசிகர் என்று தெரிவித்திருந்தார்.

வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியதால் அவர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் தேர்வானார். ஆனால், அவர் காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாமல் போனது.

Advertisment
Advertisements

இதனிடையே, வருண் சக்ரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில், வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வருண் சக்ரவர்த்தியின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: