Advertisment

வாயில் என்ன ரம்பமா? 250 கிலோ ராட்சத மீனை பார்க்க குவிந்த மக்கள்

கர்நாடக மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250 கிலோ எடைகொண்ட ராட்சத மீனை, கிரேனில் கொண்டு வரும் வீடியோ வைரலாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
வாயில் என்ன ரம்பமா? 250 கிலோ ராட்சத மீனை பார்க்க குவிந்த மக்கள்

கர்நாடக மாநிலம் மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250 கிலோ எடைகொண்ட மிகவும் அரிதான சா மீன் சிக்கியுள்ளது. அந்த ராட்சத மீனை, கிரேனில் தூக்கிவரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Advertisment

வீடியோவில்,கிரேனில் ரம்பம் போல் நீண்ட வாய் கொண்ட மீனை கொண்டு வருகையில், அதனை ஆர்வமாக பார்க்கும் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுப்பதை காணமுடிகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த Mangalore City ட்விட்டர் பக்கம், கடந்த வியாழன் அன்று மால்பே மீனவர்கள் வலையில், மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் தச்சு சுறா (சா மீன்) இனம் சிக்கியுள்ளது. இந்த சா மீனின் எடை சுமார் 250 கிலோ இருந்துள்ளது. மல்பே துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற Sea Captain என்கிற படகின் வலையில், தவறுதலாக சிக்கியுள்ளது என குறிப்பிட்டிருந்தது.

மற்றொரு ட்வீட்டில், நிபுணர்களின் கூற்றுப்படி, சா மீன் அழிந்துவரும் இனமாகும். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் அட்டவணை I இன் கீழ் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இனத்தில் இந்த மீனும் உள்ளது என பதிவிட்டிருந்தனர்.

மேலும், அடுத்த ட்வீட்டில், உள்ளூர் ஊடகத்தின் தகவலை சுட்டிக்காட்டி, மங்களூருவைச் சேர்ந்த ஒரு வணிகரால் இந்த ராட்சத மீன் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) படி,அனைத்து ஏழு வகையான சா மீன்களும், மிகவும் ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இனம் ஏழு மீட்டருக்கும் அதிகமான நீளம் வளரக்கூடியது. பல் போன்ற விளிம்புகளைக் கொண்ட அவற்றின் நீண்ட தட்டையான மூக்குகள் மீன்பிடி வலைகள் சேதமடையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Social Media Viral Fishing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment