scorecardresearch

பெண் என நினைத்து… பாய்ந்து கவ்விய முதலை: அப்புறம்தான் ட்விஸ்ட்!

தண்ணீரில் பெண்ணைப் பார்த்த ஒரு முதலை மெல்ல அருகே வந்து திடீரென அந்த பெண் மீது பாய்ந்து கவ்வியது. எல்லோரும் அய்யோ பாவம் அந்த பெண் என்று சொல்வதற்கு பதிலாக பாவம் அந்த முதலை என்று கூறி வருகின்றனர். ஏனென்றால், அப்புறம்தான் ட்விஸ்ட்டே நடந்துள்ளது.

பெண் என நினைத்து… பாய்ந்து கவ்விய முதலை: அப்புறம்தான் ட்விஸ்ட்!

சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில், உலகம் முழுவதும் தினமும் நூற்றுக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் எப்போதுமே ஒரு பெரிய வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஒரு வித்தியாசமான சுவாரசியமான நகைச்சுவையான முதலை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தண்ணீரில் ஒரு பெண்ணைப் பார்த்த ஒரு முதலை மெல்ல அருகே வந்து திடீரென அந்த பெண் மீது பாய்ந்து கவ்வியது. எல்லோரும் அய்யோ பாவம் அந்த பெண் என்று சொல்வதற்கு பதிலாக பாவம் அந்த முதலை என்று கூறி வருகின்றனர். ஏனென்றால், அப்புறம்தான் ட்விஸ்ட்டே நடந்துள்ளது.

காட்டு விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் வீடியோவுக்கு எப்போதுமே நெட்டிசன்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எப்போதும் இருக்கும். ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் வன விலங்குகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகத் தவறியதே இல்லை. ஏனென்றால், பலரும் வன விலங்குகளை நேரில் காண முடியாத ஏக்கத்தை இந்த வீடியோவைப் பார்த்து தீர்த்துக்கொள்கிறார்கள்.

தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், தண்ணீரில் ஒரு முதலை நின்று கொண்டிருக்கும் பெண்ணை பாய்ந்து கவ்வுகிறது. ஆனால், எல்லோரும், முதலைக்காகத்தான் பரிதாபப்படுகிறார்கள். ஏனென்றால், அப்புறம்தான் ட்விஸ்ட்டே நடந்தது.

அந்த வீடியோவில், ஒரு குளத்தின் அருகில் பெண் ஒருவர் நிற்பது போன்ற கட்அவுட் இருக்கிறது. குளத்தில் உள்ள முதலை ஒன்று அந்த கட்அவுட்டை நிஜமான பெண் என்று நினைத்து, அந்த பெண்ணை பிடிப்பதற்காக, முதலை மெதுவாக தண்ணீரில் நீந்தி குளத்தை விட்டு வெளியே வருகிறது. பெண்ணின் அருகே வந்ததும் அந்த முதலை வேகமாகப் பாய்ந்து பெண்ணை கவ்விப் பிடிக்கிறது. ஆனால், முதலைதான் ஏமாந்தது. ஏனென்றால், அது பெண் அல்ல ஒரு பெண்ணின் கட் அவுட் என்பது தெரியாமல் தனது வாயை புண்ணாக்கிக்கொண்டு செல்கிறது.

ஒரு முதலை குளத்தில் பெண் என நினைத்து கட் அவுட்டை பாய்ந்து கடித்து ஏமாந்த வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள பலரும் ஏமாந்த முதலையின் கதையை நினைவு கூர்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Crocodile attacks girl but damaged the crocodile twist happens viral video