முதலைகள் மிகவும் ஆபத்தான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. இவை நீரிலும் நிலத்திலும் வேட்டையாடக்கூடியவை. முதலையின் பிடியிலிருந்து தப்பிப்பது கடினமாகும். எனவே, முதலைகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என கூறுவார்கள். இருப்பினும், சிலர் முதலையை வளர்த்து வருகிறார்கள். ஆனால், கவனம் தவறினால் யார் வேண்டுமானாலும் முதலைக்கு இரையாக வாய்ப்பியிருக்கு.
அப்படியோரு முதலை வீடியோ தான் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. முதலைக்கு உணவு கொடுக்க வரும் நபர் மீது முதலை நடத்தும் திகிலான தாக்குதலை, பார்ப்போரை பீதியடைய செய்கிறது.
வீடியோவை பார்க்கையில், முதலைக்கு உணவளிக்க பெண் ஒருவர் வருவதை காண முடிகின்றது. முதலை வளர்ப்பவர் என்பதால், தைரியத்தை முதலை அருகில் சென்று உணவளித்தார். ஆனால், உணவை எடுக்காமல், அப்பெண்ணின் கையை பிடித்த முதலை, அவரை தண்ணீருக்குள் இழுத்துவிட்டது. எவ்வளவு முயற்சித்தும் பெண்ணின் கையை விடாமல் முதலை பிடித்திருந்தது. பின்னர், தண்ணீருக்குள் இறங்கிய முதலை வளர்க்கும் நபர் ஒருவர், நீண்ட நேரம் போராடி அப்பெண்ணை விடுவித்தார்.
— Nature Is Metal (@Naturelsmetall) April 8, 2022
இந்த வீடியோ @Naturelsmetall என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil