மகாராஷ்டிராவில் கனமழைக்குப் பின், சாலையில் நகர் வலம் வந்த முதலை; வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியில், சிப்லுனில் தெருக்களில் முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியில், சிப்லுனில் தெருக்களில் முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Crocodile 1

முதலை சாலையின் ஓரங்களில் ஊர்ந்து செல்வதை பயணி ஒருவர் வீடியோ எடுப்பக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்த வைரல் வீடியோவில், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லுனில் கனமழை பெய்ததையடுத்து தெருக்களில் முதலை ஒன்று காணப்படுகிறது. செய்திகளில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த முதலை அருகில் உள்ள சிவன் நதியில் இருந்து அடித்து செல்லப்பட்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Crocodile on a city tour’: Viral video from Maharashtra shows reptile on road after heavy rain

மேலும், அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் முதலை ஊர்ந்து செல்வதை பயணி ஒருவர் வீடியோ எடுப்பதைக் காட்டுகிறது. ஆட்டோரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுப்பதையும் வீடியோ படம் பிடித்துள்ளது. “கிட்கி பேண்ட் ஹாய் நண்பர்களே! (ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளன, நண்பர்களே!),” என்று ஒரு பயணி வீடியோவில் கூறுகிறார்.

வீடியோவைப் பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் எழுதியுள்ளார், “முதலை ஏன் சாலையைக் கடந்தது !! மஹாராஷ்டிராவின் ரத்னகிரியில் இருந்து ஒரு வீடியோ, இங்கே ஒரு முதலை நகர்வலம் வருகிறது. எல்லாம் பாதுகாப்பாக நடந்தன என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisment
Advertisements

மகாராஷ்டிராவில் முதலை நகர்வலம் வரும் வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வீடியோவுக்கு எதிர்வினையாற்றிய ஒரு பயனர், “வெள்ளம் காரணமாக முதலை தனது வாழ்விடத்தை இழந்திருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்தார். மற்றொரு பயனர் எழுதினார், -“எனவே இப்போது நம்முடைய பகுதியைக் கைப்பற்றுவது அவைகளின் முறை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: