Advertisment

அன்று முயல், இன்று முதலை: ஆமை ஏன் எப்போதும் வெல்கிறது?

சாவின் விளிம்பில் இருந்த ஆமை ஒன்று முதலையிடமிருந்து தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அன்று முயல், இன்று முதலை: ஆமை ஏன் எப்போதும் வெல்கிறது?

சாவின் விளிம்பில் இருந்த ஆமை ஒன்று முதலையிடமிருந்து தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisment

 

 

வீடியோவைப் பதிவிட்ட  Naveed Trumboo வனத்துறை அதிகாரி, "   உங்கள் உயிர் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினால் அடர்த்தியான தோலும், வலிமையான மனமும் தேவை. அவர்களை நீங்கள் அனுமதிக்காவிட்டால் யாரும் உங்களை உடைக்க முடியாது" என்று தெரிவித்தார்.

வீடியோவில், முதலையின் தாடையில் மாட்டிக் கொண்ட ஆமை, சற்றும் மனம் தளராமல், தனது தலை, கால் ஆகியவற்றை  ஓட்டுக்குள் முடக்கிக் கொண்டது. முதலை, எவ்வளவோ  முயற்சித்தும் ஆமையின் ஓட்டை உடைக்க முடியாமல் போனது.  மிகவும் வலிமை பொருந்திய அந்த முதலை, ஆமையின் மனத்தைரியம், வலிமையான உடல் அமைப்பின் முன் தோல்வியுற்றது.

ஊர்வனவற்றில் பாம்புகளுக்கும் முதலையினங்களுக்கும் ஆமைகள் மூத்தவையாக கருதப்படுகிறது. இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது.

 

 

 

வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

 

Viral Social Media Viral Crocodile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment