டக் டக் யாரது திருடன் என்று நாம் சிறுவயதில் விளையாடியிருப்போம். திருடன் என்று சொல்லும்பாதே, நம்மில் சிலர் பயந்திருப்போம்.
கதவை தட்டியது முதலையாக இருந்திருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம்.
ஆம், அமெரிக்காவில் நிஜமாகேவ ஒருவீட்டின் காலிங்பெல்லை அடிக்க முதலை முயலும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்டில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ளது கரென் அப்பேனாவின் வீடு. இவரது வீட்டின் காலிங்பெல்லை, 6.5 அடி நீளமுள்ள முதலை ஒன்று அடிக்க முயலும் வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.
அது சாந்தமான முதலை போல… காலிங்பெல் அடிக்க முடியாமல் போனதே, என்ற கோபத்தில் கதவு கண்ணாடியை உடைத்துவிடாமல், சிறிதுநேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த நிகழ்வை, பக்கத்து வீட்டுக்காரர், வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.