Advertisment

சி.எஸ்.கே-வுக்கு ஸ்பான்சர்; அப்பாவின் ரூ. 40,00 கோடி சொத்தை உதறிய துறவி... யார் இந்த அஜான் சிரிபான்யோ?

பணம் சம்பாதிக்க பலரும் போராடிக் கொண்டிருக்கும் காலத்தில், அப்பாவின் ரூ.40,000 கோடி சொத்தை உதறித் தள்ளிவிட்டு, சிரிபான்யோ தனது 18 வயதில் புத்த துறவியானார்.

author-image
WebDesk
New Update
Malaysian Billionaire son

மலேசிய கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகன், வென் அஜான் சிரிபான்யோ புத்த துறவியானார்.  (@Ramkshrestha)

பணம் மனித சமூகத்தையே மாற்றிவிட்டது, எல்லோரும் பணத்துக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணம் சம்பாதிக்க பலரும் போராடிக் கொண்டிருக்கும் காலத்தில், அப்பாவின் ரூ.40,000 கோடி சொத்தை உதறித் தள்ளிவிட்டு, சிரிபான்யோ தனது 18 வயதில் புத்த துறவியானார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Who is Ajahn Siripanyo, the monk who gave up his father’s $5 billion empire

பெரிய அளவிலான செல்வச் செழிப்புக்கு வாரிசாக இருந்தபோதிலும், சிரிபான்யோ தனது 18 வயதில் உலக செல்வங்களைத் துறக்க முடிவு செய்தார் - அவரது தந்தை, ஒரு தீவிர பௌத்தர் என்றும் அர்ப்பணிப்பு மிக்க புரவலர் என்றும் கூறப்படுகிறது.

செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கையைத் துறந்து, மலேசியத் தொலைத்தொடர்பு அதிபர் ஆனந்த கிருஷ்ணனின் மகன் அஜான் சிரிபான்யோ, துறவறப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏ.கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணன், மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர், அவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ. 40,000 கோடிக்கு மேல் (5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்) ஆகும்.

தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏர்செல் ஸ்பான்சராக இருந்ததற்கு இந்த ஆனந்த கிருஷ்ணன்தான் காரணம். 86 வயதாகும் ஆனந்த கிருஷ்ணன் இன்னும் தொழில்துறையில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆனந்த கிருஷ்ணனின் தந்தை ஒரு தொழிலதிபர், அதே நேரத்தில், ​​சிரிபான்யோவின் தாயார் மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்துடன் தொடர்புடையவர்.

ரூ.40,000 கோடி சொத்துக்கு வாரிசாக இருந்தாலும், சிரிபான்யோ தனது 18 வயதில் உலக செல்வங்களைத் துறக்கத் தேர்ந்தெடுத்தார் - அவரது தந்தை ஆனந்த கிருஷ்ணன், ஒரு தீவிர பௌத்தர் என்றும் அர்ப்பணிப்பு மிக்க புரவலர் என்றும் கூறப்படுகிறது. அவர் பெரிய அளவில் மதிக்கப்படுகிறார்.

தாய்லாந்து பயணத்தின் போது சிரிபான்யோவின் ஆன்மீகத் தேடல் தொடங்கியது, அங்கு அவர் தற்காலிகமாக ஒரு பௌத்த ஓய்விடத்தில் தற்காலிக குருவாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு குறுகிய கால அனுபவமாக ஆரம்பித்தது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பாக மாறியது. இன்று, அவர் தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள தாவோ டம் என்ற புத்த மத மடாலாயத்தின் தலைமை பிக்குவாக இருக்கிறார்.

லண்டனில் வளர்க்கப்பட்ட சிரிபான்யோவின் வளர்ப்பு என்பது ஒரு உலகமயமானது, அவர் குறைந்தபட்சம் 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். அவர் துறவியாக இருந்தபோதிலும், அவர் எப்போதாவது தனது தந்தையை சந்திப்பார், அவரது ஆன்மீக கடமைகள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையில் சமநிலையைக் கடைபிடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment