சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தீவிர ரசிகரின் திருமண அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ்:
கடந்த 2008 ஆம் ஆண்டி ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அணித்தான் சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனிக்கும் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உலகளவில் ரசிகர்கள் பெருகினர்.
ஐபிஎல் தொடரில் மற்ற எந்த அணிக்கு கிடைக்காத அமோக வரவேற்பு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கிடைத்தது. இதற்கு ஒரு காரணம் தல தோனி, மற்றொரு காரணம் சென்னை என்ற பெயருக்கே உள்ள பெருமை. சிஎஸ்கே அணியின் தீவிர பல ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான வினோத், சிஎஸ்கே மீது வைத்துள்ள அளவுக்கு அதிகமான காதலை தனது திருமண அழைப்பிதழில் வெளிக்காட்டியுள்ளார். வினோத் தனது திருமண அழைப்பிதழை சிஎஸ்கே அணியின் டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
இந்த அழைப்பிதழ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த அழைப்பிதழ் பகிரப்பட்டுள்ளது.
Wishing the Super fan in Vinod Buddy a very happy married life ahead! The invite is a special #Yellove from the super fan! Read More – https://t.co/VcTPPCGqbb #WhistlePodu ???????? pic.twitter.com/TKOsxqVPDr
— Chennai Super Kings (@ChennaiIPL) 12 September 2018
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் வினோத் பகிர்ந்திருப்பது ‘‘தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான நான், எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சிட விரும்பினேன். இதுகுறித்து கிராபிக் டிசைனரான எனது நண்பரிடம் பேசினேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான். இருவரும் இந்த அழைப்பிதழை வடிவமைத்தோம்’’ என்றார்.