New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/Wh6ydlkW8aLFp86XJRzS.jpg)
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4வது போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட மீம்ஸ்களை பார்க்கலாம்.
யாரடி நீ மோகினி படத்தில் இன்டர்வியூ முடித்துவிட்டு வரும் தனுஷை பார்த்து ரகுவரன், "பரவால்ல விடு.. நீ இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்" என்று பாராட்டுவார். அதனை அப்படியே தனுஷாக சி.எஸ்.கே அணியையும், ரகுவரனாக ரசிகர்களையும் மாற்றி, "பரவால்ல விடு.. நீ 200+ ரன்கள் அடிச்சதே பெரிய விஷயம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சி.எஸ்.கே. ரசிகனின் புலம்பல்.
பஞ்சாப் அணியின் பால் வல்தாட்டிக்கு பின், மீண்டும் தொடக்க வீரராக பிரியன்ஷ் ஆர்யா சதம் விளாசி இருக்கிறார். குஸ்தி படத்தில் கருப்பு துண்டுடன் வரும் விஜயகுமாரை பார்த்து வடிவேலு, "ஐயா வைகோ ஐயா.." என்று உற்சாகமடைவார். இதில் வரும் வடிவேலுவை சி.எஸ்.கே ரசிகர்களாக மாற்றி, "ஐயா இடதுகை பால் வல்தாட்டி ஐயா" என்று சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூர்யவம்சம் படத்தில் யானை மீது சவாரி செய்யும் குட்டி சக்திவேலை, "சவாரி நல்லாயிருந்துச்சா.. கீழ இறங்கு" என்று சரத் குமார் இறக்குவார்.. இதில் வரும் குட்டி சக்திவேலாக ஸ்ரேயாஸ் ஐயரையும், சரத்குமாராக கலீல் அஹ்மத்தையும் மாற்றி, "சிக்ஸ் அடிச்சது நல்லாருந்துச்சா.. இப்போ வெளியே போ" என்று சொல்வதாக மீம் பகிரப்பட்டது.
7ஜி ரயின்போ காலனி படத்தில் ஹீரோவின் தந்தை, எது தூங்குறதா.. என் பையனுக்கு ஹீரோ ஹோண்டாவுல வேலை கிடைச்சிருக்கு என்று சொல்வார். அதனை அப்படியே சி.எஸ்.கே ரசிகர்களாக மாற்றி, எது தூங்குறதா.. எங்க தல 3 சிக்ஸ் அடிச்சிருக்காரு என்று சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை 28 படத்தில் சீனுவுக்கு கடைசி வரை கேட்ச் பிடிக்க தெரியாது. ஜெய் அடிக்கும் ஒரு த்ரோவை பிடிக்க முடியாமல் ஓடுவார். அதில் வரும் பிரேம்ஜி-யாக சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணியின் ஃபீல்டர்களை மாற்றி மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.